1950ஆம் ஆண்டுகளில் வடகொரியாவுக்கும் தென்கொரியாவுக்கு நடந்த போரின்போது பிரிந்த குடும்பங்கள் மீண்டும் சந்திக்கும் நிகழ்ச்சி ஒன்று நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் 93 வயதுடைய ஒருவர்
தென்கொரியாவை சேர்ந்த Kang Neung-hwan என்ற 93 வயது முதியவர் கடந்த 65 ஆண்டுகளுக்கு முன்பு தனது கர்ப்பிணி மனைவியிடமிருந்து கொரிய போரின்போது கட்டாயமாக பிரிக்கப்பட்டார்.அன்று தொடக்கம் தனது மனைவியையும் மகனையும் பார்க்க அவர் செய்த முயற்சிகள் பலனளிக்கவில்லை.
இது தொடர்பாக Kang Neung-hwan செய்தியாளர்களிடம் கூறியபோது ‘நான் இத்தனை வருடங்கள் கழித்து எனது மனைவியையும் மகனையும் நேரில் சந்திப்பேன் என்று நினைத்து கூட பார்க்கவில்லை. கடந்த 1990ஆம் ஆண்டு செஞ்சிலுவை சங்கம் மூலம் எனது மனைவியை தேடியபோது அவரைப்பற்றிய தகவல் எதுவும் கிடைக்கவில்லை. எனவே அவர் இறந்திருப்பார் என்று எண்ணினேன். ஆனால் தெய்வாதீனமாக எனது மனைவியையும் மகனையும் தற்போது பார்க்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி என்றார்.