ஐ.எஸ். தீவிரவாதிகள் ஐரோப்பிய நாடுகளுக்குள் நுழைந்து விட்டனர்

ஈராக் மற்றும் சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். அவர்களை ஒழிக்க அமெரிக்கா மற்றும் பிரான்ஸ், இங்கிலாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

இதனால் ஆத்திரம் அடைந்த தீவிரவாதிகள் பழிக்கு பழிவாங்க ஐரோப்பிய நாடுகளில் வெடிகுண்டு தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். கடந்த நவம்பர் 13–ந்தேதி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் தொடர் வெடிகுண்டு தாக்குதல் நடத்தி 130 பேரை கொன்றனர். இத்தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் அண்டை நாடான பெல்ஜியத்துக்கு தப்பி சென்றனர். தலைநகர் பிரசெல்ஸ்சில் பதுங்கியிருந்த அவர்களை பிரான்ஸ் மற்றும் பெல்ஜியம் போலீசார் அதிரடி வேட்டை நடத்தி சிலரை சுட்டுக் கொன்றனர். மேலும் பலரை கைது செய்தனர்.

முக்கிய குற்றவாளியான சாலே அப்தெஸ்லாம் என்பவனை கடந்த 5 நாட்களுக்கு முன்பு கைது செய்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த ஐ.எஸ். தீவிரவாதிகள் பெல்ஜியம் தலைநகர் பிரசெல்ஸ்சில் விமான நிலையம் மற்றும் மெட்ரோ ரெயில் நிலையத்தில் நேற்று முன்தினம் தற்கொலை தாக்குதல் நடத்தினர்.

அதில் 32 பேர் பலியாகினர். 270 பேர் காயம் அடைந்தனர். ஐ.எஸ். தீவிரவாதிகளின் இந்த அதிரடி தாக்குதல்களால் ஐரோப்பிய நாடுகள் அச்சம் அடைந்துள்ளன. எனவே, அங்கு வழக்கத்தை விட பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையே, ஐரோப்பிய நாடுகளில் தாக்குதல்கள் நடத்த 400 பேருக்கு ஐ.எஸ். தீவிரவாதிகள் பயிற்சி அளித்து இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.தாக்குதலுக்கு அவர்கள் தயாராக இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.

இத்தாக்குதலை ஐரோப்பிய உளவுத்துறை மற்றும் ஈராக் உளவுத்துறையும் வெளியிட்டுள்ளன. பாரீசில் நடந்த தாக்குதலின் போதே 90 ஐ.எஸ். தீவிரவாதிகள் ஐரோப்பிய நாடுகளுக்குள் நுழைந்து விட்டனர் என்ற அதிர்ச்சி தகவலும் வெளியாகியுள்ளது.

ஆதிக்கம்இங்கிலாந்துஈராக்ஐஎஸ்ஐரோப்பாசிரியாதீவிரவாதிநாடுகள்பயிற்சிபழிவாங்கல்பிரான்ஸ்
Comments (0)
Add Comment