இந்திய பிரதமர் மோடி சீன பயணத்தை முடித்துக்கொண்டு மங்கோலியா சென்றார் !!

 இந்திய பிரதமர் மோடி மூன்று நாட்கள் சுற்றுப்பயணமாக கடந்த 14 ஆம் தேதி சீனா சென்றார். அங்கு சீன அதிபர்  ஜி ஜிங்பிங், சீன பிரதமர் லீ கெகியாங் உள்ளிட்ட தலைவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினார். தொடர்ந்து முக்கிய துறைகளில் ஒருங்கிணைந்து செயல்பட இந்தியாவுக்கும் சீனாவுக்கும்  இடையே 24  முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.  எல்லைப் பிரச்சினைக்கு விரைவான அரசியல் தீர்வு காணவும் இரு நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன.

சீன சுற்றுப்பயணத்தின் இறுதியாக பிரதமர் மோடி 26 வணிக ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார். இந்தியா மற்றும் சீன வர்த்தக நிறுவனங்களுக்கு இடையே  22 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பில் (இந்திய மதிப்பில் ரூ.1 லட்சத்து 38 ஆயிரத்து, 600 கோடி)  இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

இதைதொடர்ந்து தனது சீன சுற்றுப்பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்த பிரதமர் மோடி, அங்கிருந்து நேரடியாக மங்கோலியா புறப்பட்டு சென்றார்.  அந்நாட்டிற்கு அரசுமுறைப்பயணமாக செல்லும் முதல் இந்திய பிரதமர் நரேந்திர மோடிதான் என்பது குறிப்பிடத்தக்கது. இருநாடுகளுக்கும் இடையே  பிரச்சினை நிலவும் பகுதிகளில் ஒத்துழைப்பு வலுப்படுத்த பிரதமர் மோடி மங்கோலியா அதிபர் சாகியாஜின் எல்பெக்டோர்ஜை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தவுள்ளார்.

இரு நாடுகளுக்கும் இடையில் பல்வேறு புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும் இந்திய பிரதமர் மோடி அங்கிருந்து தென் கொரியாவுக்கு புறப்பட்டு செல்ல இருக்கிறார்.

இந்திய பிரதமர்ஒப்பந்தங்கள்சீன பயணம்நரேந்திர மோடிமங்கோலியா
Comments (0)
Add Comment