2016ஆம் ஆண்டுக்கான ஒன்ராறியோவின் வரவுசெலவுத் திட்டம் நிதி அமைச்சர் Charles Sousaவினால் இன்று வியாழக்கிழமை (26/02/2016) வெளியிடப்பட்டுள்ளது.
இன்று வெளியிடப்பட்டுள்ள லிபரல் அரசாங்கத்தின் இந்த வரவுசெலவுத் திட்டத்தில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு பெரும் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. 50,000 டெலர்களுக்கு குறைவான வருமானத்தை பெரும் குடும்பங்களின் மாணவர்களுக்கு பல்கலைக்கழகம் அல்லது கல்லூரிக்கான கட்டணம் இலவசமாக்கப்படும் என லிபரல் அரசாங்கம் அறிவித்துள்ளது. இவற்றிற்கு மேலதிகமாக நடுத்தர வருமானம் உள்ள குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கும் மானியங்கள் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
83,000 டொலர்களுக்கு குறைவான வருமானத்தைப் பெறும் குடும்பத்தை சேர்ந்த 50 சதவீதத்திற்கும் மேலான மாணவர்களிற்கு மானியங்கள் வழங்கப்படவுள்ளதாகவும், இவர்களுக்கு வழங்கப்படும் இந்த மானியங்கள் மீண்டும் செலுத்தப்பட வேண்டியது இல்லை என்றும் அறிவிக்கப்பட்டள்ளது. வயதான மற்றும் திருமணமான மாணவர்களுக்கான நிதி உதவிகளும் அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒன்ராறியோவின் இந்த வரவு செலவுத் திட்டத்தில் கல்வித்துறை மாத்திரம் மன்றில், பொருளாதார சுகாதாரத்துறை, வர்த்தகம் உள்ளிட்ட தொழில்துறைகள், காப்புறுதி, சுகாதாரம், மூத்தோருக்கான உதவிகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பிலும் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. வைன் மற்றும் சிகரேற்றுக்கான விலை அதிகரிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.