கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வாட்டிகனில் போப் ஆண்டவர் சிறப்பு பிரார்த்தனை

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி கத்தோலிக்க கிறிஸ்துவர்களின் தலைமை இடமான வாட்டிகன் நகரில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

உலகம் முழுவதும் உள்ள 1.2 பில்லியன் ரோமன் கத்தோலிக்கர்களின் சார்பில் போப் பிரான்சிஸ் தலைமையில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இந்த விழாவில் வாட்டிகனில் உள்ள கர்த்தினால்கள், பேராயர்கள் , போதகர்கள் மற்றும் பல்லாயிரக்கணக்கான கிறிஸ்துவர்கள் கலந்து கொண்டனர்.

அங்குள்ள கிறிஸ்துவ தேவாலயத்தில் நடைபெற்ற பிரார்த்தனையில் போப் ஆண்டவர் பங்கேற்று சிறப்பு பிரார்த்தனை நடத்தினார். அப்போது போப் ஆண்டவரின் உடல்நிலை சரியில்லாததால் அமர்ந்துகொண்டு பிரார்த்தனையில் ஈடுபட்டார்.

இறுதியாக போப் பிரான்சிஸ் வழிபாட்டில் கலந்து கொண்டவர்களுக்கு தனது கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை தெரிவித்தார்.

கிறிஸ்துமஸ்சிறப்பு பிரார்த்தனைபோப் பிரான்சிஸ்ரோமன் கத்தோலிக்கர்கள்வாட்டிகன்
Comments (0)
Add Comment