சோனியா அரசியலமைப்புக்கு விரோதமான அதிகாரம் கொண்டிருந்தார் : மோடி பதிலடி!

இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது அரசியலமைப்பிற்கு விரோதமாக அதிகாரம் கொண்டிருந்ததாக சோனியா காந்தியை கடுமையாக விமர்சித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் பாரதீய ஜனதா கூட்டணி அரசு ஆணவப்போக்குடன் நடந்து கொள்வதாகவும், இந்த ஆட்சியில் பிரதமரே எல்லா முடிவுகளையும் எடுக்கிறார் என்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் துணைத் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில் சோனியா காந்திக்கு எதிராக பிரதமர் மோடி கருத்து தெரிவித்துள்ளார். முந்தையை ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது சோனியா காந்தி அதிகார மையமாக விளங்கியதாக குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் இதுகுறித்து மோடி கூறுகையில்,

‘ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது அரசியல் சாசனத்துக்கு அப்பாற்பட்ட சிலர் அதிகாரம் செலுத்தினார்கள் என்பதை மறுக்க முடியாது. ஆனால் இப்போது அரசியல் சாசன அதிகாரம் பெற்றவர்களின் ஆட்சி நடைபெறுகிறது. மத்தியில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது பிரதம அலுவலகத்தின் அதிகாரத்தினை சோனியா காந்தி அரசியலமைப்பிற்கு விரோதமாக கொண்டிருந்தார். எனவே எங்கள் அரசின் மீதான குற்றச்சாட்டை மறுக்கிறேன்’ என்று பிரதமர் மோடி பதிலளித்துள்ளார்.

அதன்பின்னர், நிலம் கையகப்படுத்தும் மசோதா உள்ளிட்ட பிரச்சினைகள் தொடர்பாக சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி கூறியுள்ள குற்றச்சாட்டுகளுக்கும் பதில் அளித்த மோடி, ‘நிலம் கையகப்படுத்தும் மசோதா விவகாரத்தில் ஏழைகள், விவசாயிகள் மற்றும் கிராமங்களுக்கு ஆதரவாக கூறப்படும் அனைத்து பரிந்துரைகளையும் அரசு ஏற்றுக் கொள்ளும். ஒரு ஆண்டுகள் ஆகியும், பாராளுமன்றத் தேர்தலில் அடைந்த தோல்வியை காங்கிரஸ் கட்சியினால் சகித்துக் கொள்ள முடியவில்லை. ஆதரவு செயல்கள், மக்களுக்கு ஆதரவான செயல்பாடு மற்றும் நல்ல அரசுக்கான சீர்திருத்தம் மீது எங்களுடைய கவனம் இருக்கும்‘ என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்புஅரசியல்இந்திய பிரதமர்ஐக்கிய முற்போக்கு கூட்டணிசோனியா காந்திநரேந்திர மோடி
Comments (0)
Add Comment