டெல்லியையும் ஆளுவதற்கு பா.ஜ.க ஆசைப்படுகிறது : கெஜ்ரிவால் குற்றச்சாட்டு

டெல்லியில் உயர் அதிகாரிகளை நியமனம் செய்வது மற்றும் இடமாறுதல் செய்வதற்கான அதிகாரம் மாநில துணை நிலை கவர்னருக்கு மட்டுமே உள்ளது என்று  மத்திய அரசு அறிவித்தது.

இதற்கு டெல்லி முதக் மந்திரியான கெஜ்ரிவால் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து டெல்லியில் நேற்று செய்தியாளர் சந்திப்பில் கெஜ்ரிவால் கூறியதாவது:-

மத்திய அரசு தனது அறிவிப்பின் மூலம் டெல்லி மாநிலத்தில் மறைமுகமாக தனது ஆட்சியை நடத்த முயற்சிக்கிறது. தனது கட்சியின் 3 எம்.எல்.ஏ.க்கள் மூலம் பின்புற வாசல் வழியாக டெல்லியில் ஆட்சியை நடத்த விரும்புவதை பிரதமர் மோடியின் இந்த அறிவிப்பு அம்பலப்படுத்துகிறது.

மத்திய அரசு அதிகாரிகள் மீது லஞ்ச தடுப்பு பிரிவினர் நடவடிக்கை எடுக்க இயலாது என்று கூறுவதன் மூலம் ஊழல் அதிகாரிகளை பாதுகாக்க மத்திய அரசு முயற்சி செய்கிறது. இது டெல்லி மக்களுக்கு இழைக்கும் அநீதியாகும் என்று கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

அதிகாரிகள் நியமனம்கெஜ்ரிவால்டெல்லிதுணை நிலை கவர்னர்பா.ஜ.கமத்திய அரசு
Comments (0)
Add Comment