தமிழில் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்த கனடா பிரதமர்!

உலகம் முழுவதும் தமிழர்கள் பொங்கல் திருநாளை கொண்டாடி வருகிறார்கள். கனடா பிரதமர் ஜஸ்டின் கனடா மற்றும் உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுக்கு பொங்கல் நல்வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளார். டுவிட்டரில் அவர் வெளியிட்டு உள்ள பொங்கல் வாழ்த்து செய்தி வீடியோவில் தமிழில் வணக்கம் தெரிவித்து உரையை தொடங்குகிறார். கனடா, ஆங்கில மொழிகளில் பேசும் அவர், தமிழர்களின் பங்கை சிறப்பித்து பேசினார். கனடாவின் வளர்ச்சியில் தமிழர்கள் பங்கு மிக முக்கியமானது என்றும், தமிழர்கள் அனைவருக்கும் தை பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வதாகவும் ஜஸ்டின் பேசிஉள்ளார்.
ஆண்டு தோறும் ஜனவரி மாதத்தைத் தமிழ் கலாச்சார மாதமாக கனடா கொண்டாடி வருகிறது, இதனையும் தன்னுடைய பொங்கல் வாழ்த்து செய்தியின் போது குறிப்பிட்டு கனடா தமிழ் சமூகத்தின் வலுவான பாரம்பரியத்தை பிரதிபலிக்க எல்லோரையும் ஊக்குவிக்கிறேன் என சிறப்பித்து பேசினார். அவருடைய பொங்கல் வாழ்த்து செய்திக்கு பல்வேறு தரப்பினரும் நன்றியை தெரிவித்து உள்ளனர்.
கனடாதமிழ்பிரதமர்புலம்பெயர் உறவுகள்பொங்கல் வாழ்த்துக்கள்மக்கள்
Comments (0)
Add Comment