தமிழ் மக்களுக்கு அரசியல் உரிமைகளை வழங்கி அவர்கள் மனதில் இடம்பிடிக்க வேண்டும் – சண்.குகவரதன்

வடமாகாணசபையை முடக்கவைத்துவிட்டு யாழ்தேவியை போக்குவரத்துக்கு விடுவதால் தமிழ் மக்களின் மனங்களை வெல்ல முடியாது என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் உபபொதுச்செயலாளரும் மேல்மாகாணசபை உறுப்பினருமான சண்.குகவரதன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்திற்கு யாழ்தேவியை அனுப்பி வைத்தது போன்று வடபகுதி தமிழ் மக்களுக்கு அரசியல் உரிமைகளை வழங்கி அவர்கள் மனதில் இடம்பிடிக்க அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக சண்.குகவரதன் மேலும் தெரிவித்திருப்பதாவது, இந்த அரசாங்கம் கடும்போக்கு சிங்கள பௌத்த சக்திகளின் சிறைக்கைதியாக சிக்கிக் கொண்டுள்ளது. இதன் காரணமாக 13வது திருத்தத்தை தமிழ் மக்களுக்கு வழங்குவதற்கு தயங்குவதோடு வடமாகாணசபைக்கு அதிகாரப் பரவலாக்கலை வழங்காது முடக்கி வைத்துள்ளது. வடமாகாணசபையை முடக்கி மக்களின் அரசியல் உரிமைகளை பறித்துக் கொண்டு யாழ்தேவியை இயங்கச் செய்வதால் எந்தப் பிரயோசனமும் இல்லை.

போக்குவரத்து சேவைகளை வழங்க வேண்டியது அரசின் கடமையாகும். அதனையே நிறைவேற்றியுள்ளது. கடமையை செய்துவிட்டு தமிழ் மக்களுக்கு அனைத்தையும் வழங்கி விட்டதாக கூறமுடியாது. யாழ்தேவியில் பயணிப்பதற்கும் தமிழ் மக்கள் மனதில் சந்தோஷம் இருக்க வேண்டும். அது இல்லாத பயணம் வெறும் நடைப்பயணமாகவே அமையும்.

அரசு நடவடிக்கைஉறுப்பினர்சண்.குகவரதன்செயலாளர்ஜனநாயக மக்கள் முன்னணிதமிழ்போக்குவரத்துமக்கள்முடக்கம்மேல்மாகாணசபையாழ்தேவியாழ்ப்பாணம்வடபகுதிவடமாகாணசபை
Comments (0)
Add Comment