தெலங்கானாவில் ஸ்லீப்பர் செல்ஸ் பதுங்கலா? புலனாய்வுத்துறை அதிர்ச்சி தகவல்!

தெலங்கானாவில் தான் அதிக அளவிலான ஸ்லீப்பர் செல்ஸ் பதுங்கி இருப்பதாக புலனாய்வுத்துறை தெரிவித்துள்ளது.

தெலங்கானாவின் முக்கிய பகுதிகளில் நடத்தப்பட்ட சோதனையில் ஹைதராபாத் மற்றும் கரிம்நகர் ஆகிய மாவட்டங்களில் சுமார் 90 ஸ்லீப்பர் செல்ஸ்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து புலனாய்வு துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெலங்கானாவில் பதுங்கி பயங்கரவாத செயல்கள் உட்பட பல நாச வேலைகளில் ஈடுபட்டு வரும் ஸ்லீப்பர் செல்ஸ் ஐதராபாத்தில் மிகப் பெரிய பயங்கரவாத தாக்குதலை நிகழ்த்த பலமுறை முயன்றுள்ளனர்.

ஹூஜி மற்றும் இந்தியன் முஜாஹிதீன் அமைப்பைச் சேர்ந்த இவர்கள் சூழ்நிலையை ஆராய்ந்து அதற்கு தகுந்தாற் போல் தாக்குதல்களை நடத்துகின்றனர். ஐஎஸ்ஐஎஸ் அமைப்பைச் சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து ஸ்லீப்பர் செல்களையும் பிடித்து விசாரித்து வருகிறோம் என்று புலனாய்வுத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தெலங்கானாபுலனாய்வுத் துறைஸ்லீப்பர் செல்ஸ்ஹைதராபாத்
Comments (0)
Add Comment