பதான்கோட் தாக்குதலில் சீனாவின் வயர்லெஸ் கருவி!

பதான்கோட் தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட காரிலிருந்து சீனாவில் தயாரிக்கப்பட்ட வயர்லெஸ் கருவி கைப்பற்றப்பட்டதாக இந்திய தேசியப் புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானின் ஷகர்கர் பகுதியிலிருந்து இந்திய எல்லையான பமியால் கிராமத்துக்கு கடந்த 1-ஆம் தேதி பயங்கரவாதிகள் சிலர் ஊடுருவி வந்தனர். அப்போது அவ்வழியே சென்ற காவல்துறை எஸ்.பி. சல்விந்தர் சிங்கின் வாகனத்தை அவர்கள் கடத்திச் சென்றதாகக் கூறப்படுகிறது.

அந்த நேரத்தில் பாகிஸ்தான் நாட்டு சிம் கார்டுகளை பயங்கரவாதிகள் பயன்படுத்தியதும், அந்நாட்டில் உள்ள தங்களது கூட்டாளிகளுடன் செல்போனில் உரையாடியதும் கண்டறியப்பட்டது.

இந்நிலையில், கடத்தப்பட்ட காரில் இருந்து அவர்கள் பயன்படுத்தியதாகச் சந்தேகிக்கப்படும் வயர்லெஸ் கருவி ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், அந்தக் கருவி சீனத் தயாரிப்பு என்றும், அதிலிருந்த தகவல்கள் அழிக்கப்பட்டிருப்பதாகவும் தேசியப் புலனாய்வு அமைப்பின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். மேலும் அழிக்கப்பட்ட தகவல்களை மீட்டெடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கருவிசீனாவின்தாக்குதலில்பதான்கோட்வயர்லெஸ்
Comments (0)
Add Comment