எனினும் இந்த மோதலில் நமது பாதுகாப்பு படையினர் 7 பேர் வீர மரணம் அடைந்தனர். ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத இயக்கத்தின் தலைவன் மவுலானா மசூத் அசார், அவனது சகோதரன் அப்துல் ராவுப்பும் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர்கள் என்பது கண்டறிப்பட்டது.
இந்நிலையில், மசூத் அசார் ஆப்கானிஸ்தான் நாட்டிற்கு சென்று விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பதான்கோட் தாக்குதல் குறித்து விசாரணை மேற்கொண்டு வரும் பாகிஸ்தான் நாட்டின் கூட்டு விசாரணைக் குழுவின் உறுப்பினர் ஒருவர் இந்த தகவலை இன்று தெரிவித்துள்ளார்.
“பாகிஸ்தானின் பழங்குடியினர் பகுதியில் நடமாடிக் கொண்டிருந்த அசாரைப் பிடிக்க சட்ட அமலாக்கத் துறை மூலம் முயற்சித்தோம். ஆனால் அவர் ஆப்கானிஸ்தான் தப்பிச் சென்று விட்டார்” என்று அவர் தெரிவித்தார்.
மசூத் அசாரை சரியான அடையாளம் அறிவிக்கப்படாமல் உள்ளதால் அவர் தப்பித்து சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.