பிரித்தானியா ஒக்ஸ்போர்ட்டில் பாரிய விபத்து! 17 பேர் படுகாயம்

பிரித்தானியாவில் ஒக்ஸ்போர்ட்டில் மாநிலத்தில் ஏற்பட்ட விபத்தில் 17 பேர் காயமடைந்துள்ளனர்.

ஒக்ஸ்ஃபோர்ட் பிராந்திய நெடுஞ்சாலையிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது என அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஒக்ஸ்போர்ட் மாநிலத்தில் உள்ள எம்- 40 நெடுஞ்சாலையில் இன்று பேரூந்து ஒன்று பாதையை விட்டு விலகியதனால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் நிலவிய கடுமையான மூடுபனி காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் குறித்த மூடுபனி காரணமாக தெளிவு திறன் குறைவாகக் காணப்பட்டமை விபத்திற்கான காரணமாக இருக்கலாம் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை குறித்த விபத்தில் காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக, வைத்தியசாலை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒக்ஸ்போர்ட்சிகிச்சைநெடுஞ்சாலைமருத்துவானைமூடு பணிவிபத்து
Comments (0)
Add Comment