போர்க்குற்றங்கள் குறித்து சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டுமென மனிதஉரிமை கண்காணிப்பகம் வலியுறுத்து.


தமிழர் தாயகத்தில் இறுதிக் கட்ட யுத்தத்தின் போது இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பாக சர்வதேச விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென மனிதஉரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

ஐ.நா மனிதஉரிமை ஆணையாளர் நவனீதம்பிள்ளை, தமிழர் தாயகத்தில் இடம்பெற்றதாகக் குறிப்பிடப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டுமென கோரியுள்ளதற்கு தாம் பூரண ஆதரவு வழங்குவதாக மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

யுத்தத்தின் போது இடம்பெற்ற பாரியளவிலான மனிதஉரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச சுயாதீன விசாரணைகள் நடத்தப்பட வேண்டியது அவசியமானது. இறுதிக் கட்ட யுத்தத்தின் போது உயிரிழந்தவர்கள் தொடர்பில் உரிய நடவடிக்கைகளை எடுக்க சிறீலங்கா அரசாங்கம் தவறியுள்ளதாக மனித உரிமைக் கண்காணிப்பகத்தின் ஆசிய பிராந்திய வலயப் பணிப்பாளர் பிரட் அடம்ஸ் தெரிவித்துள்ளார்.

சிறீலங்கா படையினர் மீதான குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரணை நடாத்த அந்த அரசாங்கம் உரிய முனைப்பு காட்டத் தவறியுள்ளதாகவும் பிரட் அடம்ஸ் குற்றம் சுமத்தியுள்ளார்.

போர்க்குற்றங்கள்மனிதஉரிமை கண்காணிப்பகம்விசாரணை நடாத்த
Comments (0)
Add Comment