மத்திய ஏமானில் தற்கொலை தாக்குதல் – 26 பேர் பலி

மத்திய ஏமனில் உள்ள இப் நகரில் மதத்தலைவர் ஒருவரின் பிறந்தநாள் விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இதனையொட்டி அங்குள்ள கலாசார மையத்தில் கலைநிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில் கலந்து கொள்வதற்காக ஏராளமானவர்கள் திரண்டு இருந்தனர்.

அப்போது விருந்தினர்களுடன் மன்றத்துக்குள் நுழைந்த தற்கொலைப்படை தீவிரவாதி உடலில் கட்டி இருந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்தான். இதில் உடல் சிதறி அவன் இறந்ததோடு, அங்கு இருந்த 26 அப்பாவி பொதுமக்களும் உயிரிழந்தனர். 48 பேர் படுகாயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்களில் பெரும்பாலானவர்கள் குழந்தைகளும், பெண்களும் ஆவார்கள். பெரும்பாலான உள்ளூர் அதிகாரிகள் தப்பி விட்டாலும், கலாசார துறை இயக்குனர் குண்டுவெடிப்பில் சிக்கி ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த தாக்குதலுக்கு எந்த தீவிரவாத அமைப்பும் உடனடியாக பொறுப்பு ஏற்கவில்லை. இருப்பினும் தொடர்ந்து நாசவேலைகளில் அல் கொய்தா அமைப்புடன் தொடர்புடைய அரேபியன் பெனின்சுலா தீவிரவாதிகள் ஈடுபட்டு வருவதால், இந்த சம்பவத்திற்கும் அவர்கள் காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

ஏமான்கலைதற்கொலைப்படைதீவிரவாதிநகர்நிகழ்ச்சிபிறந்தநாள்மதத்தலைவர்மத்தியமன்றம்மையம்விருந்தினர்விழா
Comments (0)
Add Comment