மெக்சிக்கோ விலங்குகள் அமெரிக்காவிற்கு மாற்றம்

மெக்சிகோவில் மோசமான சூழ்நிலைகளில் வளர்க்கப்பட்ட புலி, சிறுத்தை, சிங்கம் போன்ற பத்துக்கும் மேற்பட்ட விலங்குகள் அமெரிக்காவுக்கு இடம் மாற்றம் செய்யப்பட்டன.   மெக்சிகோ நகரில் செயல்படும் தனியார் பூங்கா ஒன்றில் இவை வளர்க்கப்பட்டு வந்தன.

இந்த விலங்குகள் மிக குறுகலான இடங்களில், போதிய வசதிகளின்றி வளர்க்கப்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் அமெரிக்காவைச் சேர்ந்த உலக விலங்கியல் பூங்கா அதிகாரிகள் இவற்றை தங்கள் நாட்டுக்கு கொண்டுச் சென்றனர். இதில், 6 புலிகள், இரண்டு சிங்கங்கள், மற்றும் 3 சிறுத்தைகள் தனி விமானம் மூலம் அமெரிக்காவின் கொலராடோவில் உள்ள விலங்கியல் பூங்கா ஒன்றிற்கு கொண்டு செல்லப்பட்டன. சுமார் 720 ஏக்கர் பரப்பளவில் உள்ள புதிய சூழ்நிலையில் இந்த விலங்குகள் இனி பராமரிக்கப்படும் என மெக்சிகோ அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.

அமெரிக்காஇடமாற்றம்சிங்கம்சிறுத்தைசூழ்நிலைபுலிமெக்சிக்கோவளர்ப்புவிலங்குகள்
Comments (0)
Add Comment