விமானப்படை தளபதிக்கும் பாதுகாப்பு செயலாளருக்கும் இடையில் சந்திப்பு

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள பாகிஸ்தானின் விமானப்படை தளபதி தாஹிர் ராபிக் பட் (Tahir Rafique Butt), பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவை சந்தித்து இரு தரப்பு பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து பேச்சு நடத்தியுள்ளார்.நேற்று இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இது தொடர்பாக  கொழும்பிலுள்ள பாகிஸ்தானிய தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

விமானப்படை தளபதிக்கும் பாதுகாப்பு செயலாளருக்கும் இடையில் இடம்பெற்ற மிகவும் சுமூகமான சந்திப்பின் போது இரு தரப்பு உறவுகள் மற்றும் இருதரப்பு நலன்கள் குறித்து ஆராயப்பட்டன. இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள விமானப்படை தளபதி இலங்கை விமானப்படை தளபதியுடனும் பேச்சுக்களை மேற்கொண்டார். இதன்போது இரு நாட்டு விமானப்படை மத்தியில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து ஆராயப்பட்டது. பயிற்சிகள் மற்றும் துறைசார் விடயங்களில் பாகிஸ்தான் தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்கும் என உத்தரவாதம் அளிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

(Tahir Rafique Butt)இருஉறவுகளைகுறித்துகோத்தாபயசந்தித்துசெயலாளர்தரப்புதளபதிதாஹிர்நடத்தியுள்ளார்பட்பாகிஸ்தானின்பாதுகாப்புபாதுகாப்புச்பேச்சுராஜபக்ஷவைராபிக்வலுப்படுத்துவதுவிமானப்படை
Comments (0)
Add Comment