ஸ்கொட் மொரிசன் அடுத்த வாரம் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார்

அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் ஸ்கொட் மொரிசன் அடுத்த வாரம் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார். 150க்கும் மேற்பட்ட இலங்கை புகலிட கோரிக்கையாளர்களுடன் அவுஸ்திரேலிய கடற்பரப்பிற்கு வந்த படகில் சென்றவர்களுக்கு என்ன நடந்தது என்ற சர்ச்சைக்கு இன்னும் முடிவு தெரியாத நிலையில் அவரது இந்த இலங்கை விஜயம் இடம்பெறவுள்ளது.மொரிசன் எதிர்வரும் திங்கட்கிழமை இலங்கைக்கு வருவார் என எதிர்பார்ப்பதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கை வரும் அவர் அரசாங்கம் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளார்.கடந்த வாரம் அவுஸ்திரேலியா கடற்பரப்பிற்குள் படகில் வந்த இலங்கை புகலிட கோரிக்கையாளர்கள் மீண்டும் இலங்கை அனுப்பி வைக்கப்பட்டதாக அவுஸ்திரேலியா ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.ஆனால் மொரிசன் மற்றும் அவுஸ்திரேலிய அரசாங்கம் இது குறித்து கருத்து எதனையும் தெரிவிக்கவில்லை.

அதேவேளை புகலிட கோரிக்கையாளர்கள் சென்ற படகை தாம் காவலில் எடுக்கவில்லை என இலங்கை கடற்படையினர் தெரிவித்தனர்.இதனிடையே படகில் சென்ற புகலிட கோரிக்கையாளர்கள் தொடர்பிலான செய்திகள் குறித்து ஐ.நாவின் அகதிகளுக்கான நிறுவனம் தனது கவலைகளை வெளியிட்டிருந்தது.

அடுத்தஅமைச்சர்அவுஸ்திரேலியஇலங்கைக்குஉள்ளார்குடிவரவுசெய்யமொரிசன்வாரம்விஜயம்ஸ்கொட்
Comments (0)
Add Comment