Designed by Iniyas LTD
google street view இல் காணாமல்போன வலி.வடக்கு!
கூகுள் நிறுவனம் ஸ்ரீலங்கா மற்றும் வடகிழக்கில் கூகுள் வீதி பார்வையினை (google street view) அறிமுகப்படுத்தி உள்ளது. அதன் மூலம் தீவின் அனைத்து பிரதேசங்களையும் பார்வையிட கூடியவாறு உள்ளன.
ஆனால் வலி,வடக்கு உயர் பாதுகாப்பு வலய பிரதேசத்திற்கு உட்பட்ட பிரதேசத்தினை பார்வையிட முடியவில்லை. கூகிள் வீதி பார்வையூடாக (google street view) மூலம் உயர் பாதுகாப்பு வலய எல்லைகள் மாத்திரமே சென்று பார்வையிட கூடியவாறு உள்ளன.
வலி.வடக்கில் இருந்து கடந்த 30 வருடகாலமாக இடம்பெயர்ந்து தற்காலிக இடங்களில் வசிக்கும் மக்கள் கூகிள் நிறுவனம் அறிமுகப்படுத்திய இந்த முறையின் ஊடாக கூட தமது சொந்த இடங்களை பார்வையிட முடியவில்லை என கவலை கொண்டுள்ளனர்.
