Designed by Iniyas LTD
OL/ AL மாணவர்களிற்கு ஆட்பதிவுத் திணைக்களத்தினால் விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்
இந்த ஆண்டு கல்விப் பொதுத் தராதர சாதாரண தர மற்றும் உயர்தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள், தேசிய அடையாள அட்டையைப் பெற்றுக் கொள்வதற்கான விண்ணபத்துடன், ஆறு மாதங்களுக்குள் பெற்றுக் கொள்ளப்பட்ட பிறப்புச் சான்றிதழையும் இணைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது.
இதுதொடர்பான சுற்றுநிரூபம், ஆட்பதிவுத் திணைக்களத்தினால் சகல பாடசாலைகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.
எனினும் குறித்த விடயம் மாணவர்களையும், பெற்றோரையும் சிரமத்துக்கு உள்ளாக்கும் என்ற கருத்து முன்வைக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக குறித்த விடயம் தொடர்பில் தாம் நேற்றையதினம் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் கவனத்துக்கு கொண்டுசென்றதாக, நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.அரவிந்த்குமார் தெரிவித்துள்ளார்