Designed by Iniyas LTD
அகமதினில் உம் நினைவுடன் நாம்
ஈழத்தின் விடுதலைக்காய் புலம்பெயர் தேசங்களில் கூவி ஓய்ந்த குரலுக்காய்…….. தானைத்தலைவன் சேனையின் சேதுபதியே எங்கள் பாலா அண்ணாவே…..
அன்னையவள் மடிதவழ்ந்து திண்ணையில் தினமுறங்கி
தமிழ் உயர்ந்து விண்ணைத்தொட அண்ணனுடன் அருகிருந்தாய் ,,
அத்தனையும் அரசியல் ஞானம் …..
அகிலத்தில் உயர்ந்தஐயா தமிழ் ஞானம் ..
அகமதினில் உம் நினைவும் ….
தேகமதில் தேசமெனும் தேன்நினைவும்….
ஏங்கி இன்று ஏழாண்டு,…
ஏழு கடலின் ஏழு அலைபோல் ….
ஏங்கி நிற்கும் எம் மனதில் உம்நினைவு ..
ஏற்றுகிறோம் சுடர் விளக்கை ஏற்றிடுங்கள் எம் அன்பை ..
எம்தலைவர் வழியில் ….
என்றும் உம் நினைவுடன் …..
போராளிகள் ….