Designed by Iniyas LTD
அதிமுக ஆட்சிக்கு வாந்தால் தமிழகம் அழிந்து விடும் – வைகோ
அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாடு மீண்டும் மீளமுடியாத அழிவுக்கு சென்றுவிடும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்தார்.
திருச்சியில் நேற்று மதிமுக மாவட்ட அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகள் வழங்கிய தேர்தல் நிதியைப் பெற்றுக்கொண்ட அவர், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கடந்த சில நாட்களாக அதிமுக தொடர்பாக பல மர்மமான செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. அமைச்சர் சண்முகநாதனின் உதவியாளர் வேலை வாங்கித் தருவதாக பண மோசடி செய்ததாக கைது செய்யப்பட்டுள்ளார். ஐவர் அணி என்றழைக்கப்பட்ட அமைச் சர்களில் பிரதான இடத்தில் இருந்த ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வ நாதன் ஆகிய இருவரும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வந்த நிலையில், வீட்டுச் சிறையில் வைப்பது போல எங்கும் போகாதபடி வைக்கப் பட்டிருப்பதாகவும், அவர்களிடம் இருந்து ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டதாகவும் செய்தி கள் வருகின்றன.
இவை, உண் மையா அல்லது வதந்தியா என்று தெரியவில்லை. மக்களை ஏமாற்று வதற்காக முதல்வர் ஜெயலலிதா நடத்தும் மோசடி நாடகம் இது. அதிமுக ஆட்சியில் எல்லா துறைகளிலும் ஊழல் நடை பெற்றுள்ளது. அதிமுக மீண்டும் ஆட் சிக்கு வந்தால் தமிழ்நாடு மீண்டும் மீளமுடியாத அழிவுக்குச் சென்று விடும். அதேபோல, திமுகவும் ஊழல் கட்சிதான். கருணாநிதியின் குடும்பமே ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளாகி இருக்கிறது. எனவே, தமிழ்நாடு ஊழலின் பிடி யில் இருந்து விடுபட வேண்டுமானால் மக்கள் நலக் கூட்டணியை வாக்காளர் கள் தேர்ந்தெடுக்க வேண்டும். மக்கள் நலக் கூட்டணி நிச்சயம் ஆட்சி அமைக் கும். உடுமலைப்பேட்டை பொறியியல் மாணவர் சங்கர் படுகொலை விவ காரத்தில் அரசைக் கண்டித்து, வரும் 21-ம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே மக்கள் நலக் கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெறும். இவ்வாறு வைகோ கூறினார்.
விஜயகாந்த் முதல்வர் வேட்பாளர்? விஜயகாந்த் தலைமையை ஏற்க வாய்ப்பில்லை என்று தான் தெரிவித்ததாக வந்த தகவல்கள் குறித்து வைகோ தொலைபேசியில் தனியார் பத்திரிக்கையிடம் கூறியதாவது; விஜயகாந்த் தலைமையிலான கூட்டணியில் சேருவீர்களா என செய்தியாளர்கள் கேட்டபோது, ‘மக்கள் நலக் கூட்டணி ஏற்கெனவே அமைக்கப்பட்டு மக்களிடம் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரை (விஜயகாந்த்) எங்கள் கூட்டணியில் இணைய வேண்டுகோள் விடுத்திருக்கிறோம். ஒரு நல்ல முடிவை எடுப்பார் என எதிர்பார்க்கிறோம்’என்றுதான் கூறினேன்.. அடுத்ததாக அவரை முதல்வர் வேட்பாளராக அறிவிப்பீர்களா என செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு ‘மக்கள் நலக் கூட்டணியில் அவர் கரம் கோர்த்த பிறகு நீங்கள் கேட்கும் கேள்விகள் உட்பட அனைத்தும் விவாதித்து நல்ல முடிவு எடுக்கப்படும்’ என்று மட்டுமே தெரிவித்தேன் என்றார் வைகோ.