Designed by Iniyas LTD
அதிமுக ஆட்சியில் டாஸ்மாக் மட்டும்தான் வளர்ந்துள்ளது – பழ.கருப்பையா
நெல்லை பாளையம்கோட்டை ஜவகர் மைதானத்தில் திராவிட இயக்க தமிழ் பேரவை சார்பில் பொதுகூட்டம் நடைபெற்றது.
இந்த பொதுகூட்டத்தில் முன்னால் சட்டமன்ற உறுப்பினர் பழ.கருப்பையா சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர் பேசியதாவது, தமிழ்நாட்டில் எந்த ஆட்சியும் தொடர்ந்து 10 ஆண்டு காலம் நடந்த்தில்லை, ஜெயலலிதாவிற்கே அவர் வெற்றி பெறுவார் என்ற நம்பிக்கை இல்லை.திராவிட இயக்கத்தை ஒழித்து விடுவோம் என்று ஒரு சிலர் கூறி வருகின்றனர். திராவிட பெயரில் தான் ஜெயலலிதா ஆட்சி நடத்துகிறார்.என்றும் திராவிட கருத்திற்கு மாறாக இந்த மண்ணில் யாரும் ஆட்சி நடத்த முடியாது என்றும் நான் சட்டசபையில் 2 முறை தான் பேசியிருக்கிறேன் அதில் ஒருமுறை 20 நிமிடம் பேசியதற்கு எனக்கு ஜெயலலிதா 30 நிமிடம் விளக்கம் கொடுக்கவேண்டியநிலை ஏற்பட்டுவிட்டது என்றும் அதிமுகவில் எந்த முடிவையும் ஜெயலலிதா மட்டும்தான் தான் எடுப்பார்.
என்றும் குற்றம் சாடினார் . மேலும் உளவுத்துறையை வைத்து கொண்டு தன் சொந்த கட்சிகார்ர்களை உளவு பார்த்து கட்சியை வழிநடத்துபவர் ஜெயலலிதா, இந்த வேலையை காவல்துறையினர் பார்த்தால் எப்படி சட்டம் ஒழுங்கை பாதுகாக்க முடியும் என்றும் கேள்வி எழுப்பினார்.மேலும் அரசியல்,அதிகாரிகள், பத்திரிக்கையாளர்கள்,நீதிமன்றம் என ஜனநாயகத்தின் 4 தூண்களும் பணம் படைத்தவர்களிடமும், பதவியில் இருப்பவர்களிடமும் பயனற்று காணப்படுகிறது.
40 ஆண்டு கால அரசியல் வரலாற்றில் ஜெயலலிதாவை போல் கயமை தன்மை கொண்ட தலைவரை நான் பார்த்ததில்லை என்றும் 110 விதியின் கீழ் அறிவித்த எந்த திட்டமும் நிறைவேற்றவில்லை, டாஸ்மாக் மட்டும்தான் இந்த ஆட்சியில் வளர்ந்துள்ளது. விஜயகாந்த் முதல்வராக அறிவித்த அன்றே மக்கள் நல கூட்டணி தோற்றுவிட்டது என்றும் அவர் பேசினார். இந்த கூட்டத்தில் திராவிட இயக்க தமிழ் பேரவையினர் மற்றும் திமுக முன்னாள் அமைச்சர்கள் ,சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்