Designed by Iniyas LTD
அமெரிக்க எப்.பி.ஐ மற்றும் இன்டர்போல் அதிகாரிகள் இலங்கைக்கு விஜயம்…

அமெரிக்காவின் உள்ளகப் புலனாய்வு அமைப்பான எப்.பி.ஐ மற்றும் இன்டர்போல் அதிகாரிகள் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளனர்.
இலங்கையில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவங்கள் தொடர்பில் இலங்கை அரசின் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்காக அமெரிக்க புலனாய்வு அமைப்பின் அதிகாரிகள் குழுவொன்று இலங்கைக்கு சென்றுள்ளது.
இத்தகவலை இலங்கைக்கான அமெரிக்க தூதரகத்தின் பேச்சளார் நென்சி வென் ஹோன் உறுதிப்படுத்தியுள்ளார்.
மேலும் இன்டர்போல் மற்றும் எப்.பி.ஐ அதிகாரிகள் இலங்கைக்கு சென்றுள்ளமையை அரச இரசாயண பகுப்பாய்குவு திணைக்களமும் தகவல் வெளியிட்டுள்ளமை குறீப்பிடத்தக்கது.