Designed by Iniyas LTD
அமெரிக்க தூதர் அலைனா பி. ரெப்லிட்ஸ் மஹிந்த இடையில் சந்திப்பு
அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் ஊடகம் மற்றும் தெற்கு ஆசியா என்பவற்றுக்குப் பொறுப்பான உதவிச் செயலாளர் அலிஸ் வெல்ஸ் இன்று காலை எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸவைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். மஹிந்த ராஜபக்ஸவின் விஜேராம இல்லத்தில் வைத்து இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
உதவிச் செயலாளர் அலிஸ் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ளார். இதன் ஓர் அங்கமாகவே இன்றைய சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பின் போது பேராசிரியர் ஜீ.எல் பீரிஸ் மற்றும் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலைனா பி. ரெப்லிட்ஸ் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.