தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

அரசியல் கைதிகளின் விடுதலைக்கான நடைபவனியில் யாழ் பல்கலைகழக மாணவர்களுடன் பேரணியில் இணைந்த மக்கள்…

அரசியல் கைதிகளில் விடுதலையை முன் நிறுத்தி  யாழ் பல்கலைகழக மாணவர்களினால் ஆரபிக்கப்பட்ட   நடைபவனி இன்று காலை வவுனியாவினை சென்றடைந்துள்ளது.

அரசியல் கைதிகளின் விடுதலைக்கான நடைபவணி கடந்த 9ம் திகதி யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்டு நடைபவணியாக இயக்கச்சி , மாங்குளம் , ஒமந்தை ஊடாக  வவுனியா நகரை  சென்றடைந்துள்ளது.

இந்நிலையில் குறித்த  நடைபவனிக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் வவுனியா தாண்டிக்குளத்தில் வடமாகாணசபை உறுப்பினர்களான ப. சத்தியலிங்கம், ம. தியாகராசா, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வினோதரலிங்கம், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் செந்தில்நாதன் மயூரன்,

நகரசபை மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள், முச்சக்கரவண்டி உரிமையாளர்கள் சங்கம், வவுனியா வர்த்தகர் சங்கம், பொது அமைப்புக்கள், வவுனியா வர்த்தகர் நலன்புரிச்சங்கம், உள்ளூர் விளை பொருள் விற்பனையாளர் சங்கம், வவுனியா மாவட்ட பொது அமைப்புகளின் ஒன்றியம், பொது மக்கள் எனப்பலரும் இந்த பேரணியில் இணந்துள்ளனர்.

பேரணியானது  வவுனியா பழைய பேரூந்து நிலையத்திற்கு முன்பாக  சென்றபோது , வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய மாணவர்கள் கோசங்களை எழுப்பி போராட்டத்திற்கு தங்களது ஆதரவினை வழங்கியிருந்தனர்.

அதோடு பேரணியில் சென்றவர்களிற்கு  வவுனியா வர்த்தக சங்கத்தினால் மருத்துவ பொருட்கள் மற்றும் உணவுகளும்  வழங்கப்பட்டுள்ளன.

தொடர்ச்சியாக  ஏ9வீதியில் அமைந்துள்ள மதவுவைத்தகுளம் பிள்ளையார் ஆலயத்தில் அந்தனர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் விஸேட பூஜை வழிபாடுகளும் இடம்பெற்றது.

இதேவேளை இன்று  மதவாச்சி நோக்கி செல்லவுள்ள பேரணி  நாளையதினம் அனுராதபுரத்தினை சென்றடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது

Comments
Loading...