தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

அரசியல் சுயநலங்களக்காக எங்களை தண்ணீர் அகதி ஆக்காதே – மக்கள் போராட்டம்

யாழ்,கிளிநொச்சி மக்கள் ஒன்றிணைந்து இன்று 10.00 -11.00 மணிவரை முற்போக்கு தமிழ் தேசிய கட்சியினரால் நீர்ப்பாசன தினைக்களத்திற்கு முன்பாக    கவனயீர்ப்பு போராட்டம் நடை பெற்றது.TN-1

யாழ்,கிளிநொச்சி மக்களின் அன்றாட தேவையான குடிநீர் பிரச்சினை தொடர்பாகவும் இந்த குடிநீர் பிரச்சினையை நிவர்த்தி செய்யும் பொருட்டு இரணைமடுகுளத்திட்டம் அமுல்படுத்தப்பட வேண்டும் எனவும் மக்களின் அன்றாட தேவையான குடிநீர் பிரச்சினைக்க தீர்வு காணுவதற்காக  வடமாகாணசபை அரசாங்கம் உடனடியாக இரணைமடுத்திட்டதை அமுல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து முற்போக்கு தமிழ் தேசிய கட்சி ஏற்பாட்டால் போராட்டம் நடாத்தப்பட்டது.

“இதில் அரசியல் சுயநலங்களக்காக எங்களை தண்ணீர் அகதி ஆக்காதே” என்ற கருப்பொருளை மையமாகக்     கொண்டு பின்வரும் கோசங்கள் எழுப்பப்பட்டன.

1. தண்ணி தா தண்ணி தா எமக்கு தண்ணி தா!

2. அனுப்பாதே அனுப்பாதே பணத்தை திருப்பி அனுப்பாதே!

3. அமுல்படுத்து அமுல்;படுத்து இரணைமடுத்திட்டத்தை அமுல்;படுத்து!

4. மறக்காதே மறக்காதே வாக்களித்த மக்களை மறக்காதே!

5. மறுக்காதே மறுக்காதே தண்ணீர் தர மறுக்காதே!

6. கழிவகற்றல் திட்டத்தை உடன் அமுல்படுத்து!

7. வடமாகாண சபையே எங்களுக்கு பதில் சொல்!

8. ஓயமாட்டோம் ஓயமாட்டோம் தீர்வூ கிடைக்கும் வரை ஓயமாட்டோம்!

9. செய்யூங்கள் செய்யூங்கள் முதலமைச்சரே உங்கள் கடமையைச் செய்யூங்கள்!

10. கடமையைச் செய் கடமையைச் செய் நீர்வழங்கும் சபையே உன் கடமையைச் செய்!

11. வீணடிக்காதே வீணடிக்காதே உன் காலத்தை வீணடிக்காதே!

12. இரணைமடுத் தீர்மானம் எங்களுக்கு ஏமாற்றம்!

13. விவசாய அமைச்சரே ஏன் பாரபட்சம்!

14. வடமாகாணசபை உறுப்பினர்களே உங்களை நம்பியே நாங்கள்!

15. உள்ளூராட்சி மன்றத் தலைவர்களே ஏன் இந்த மௌனம்!

16. இரணைமடுகுள எமது விவசாய உறவுகளே ஏன் இந்த வேறுபாடு!

17. தண்ணீருக்காய் தவிக்கின்றௌம் எங்கள் நிலமை புரியவில்லையா!

போன்ற கோசங்களை முன்வைக்கப்பட்டு இந்த கவனயீர்ப்பு போராட்டம் நடை பெற்றது .

வடமாகாணசபை அரசாங்கம் நடவடிக்கை எடுக்கத்தவறும் பட்சத்தில் மேலும் தமது ஆர்ப்பாட்டத்தை தொடரவுள்ளோம். எனவும் எதிர்காலத்தில் ஜனாதிபதியின் கவனத்தை ஈர்க்கும் வகையில் மேலும் பல போராட்டங்களை நடாத்தவுள்ளதாகவும். அக் கட்சியின் செயலாளர் நாயகம் எஸ்.விஜயகாந் தெரிவித்தாா்.

மேலும்  48 மில்லியன் அமொிக்க டொலர் திரும்பி அனுப்பப்படுமாக இருந்தால் எக்காலத்திலும் மக்களின் அன்றாட தேவைக்கு  வடமாகாணசபை அரசினால் தீர்வு காணப்படமாட்டாது எனவும் மக்களின் அன்றாட தேவையை பூர்த்தி செய்ய முடியாத வடமாகாணசபை அரசாங்கம் எந்தவகையில் மக்களுக்கு உதவ முடியும் எனவும் வடமாகாணசபை அரசாங்கத்தை அங்கு கேள்வி எழுப்பியுள்ளனர்.

Comments
Loading...