தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

அவதூறு வழக்கு தொடர்பாக ஸ்டாலின், விஜயகாந்த், அன்புமணி நேரில் ஆஜர்

தமிழக அரசு தொடர்ந்த அவதூறு வழக்குகள் தொடர்பாக ஸ்டாலின், விஜயகாந்த், அன்புமணி ஆகியோர் நேரில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு சென்னை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது .stalin-anbumani-vijayakanth

சென்னையில் வெள்ளம் ஏற்பட்டது தொடர்பாக அவதூறு பரப்பியதாக திமுக பொருளாளர் ஸ்டாலின், தேமுதிக தலைவர் விஜயகாந்த், பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ஆகியோர் மீது தமிழக அரசு சார்பில் சென்னை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதி ராஜமாணிக்கம் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அவதூறு வழக்கு தொடர்பாக ஏப்ரல் மாதம் 18ம் தேதி திமுக பொருளாளர் ஸ்டாலினும், 21 ம் தேதி அன்பு மணி ராமதாசும் 25 ம் தேதி விஜயகாந்தும் நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.   அதே போன்று இது தொடர்பாக செய்தி வெளியிட்ட தினமலர், தினகரன் பத்திரிக்கை ஆசிரியர்கள் ஏப்ரல் 6ம் தேதியும் முரசொலி பத்திரிகை ஆசிரியர் 12ம் தேதியும் நேரில் ஆஜராகுமாறு நீதிபதி உத்தரவிட்டார்.

Comments
Loading...