Designed by Iniyas LTD
அவுஸ்ரேலிய தொடரில் லோகேஷ் ராகுலுக்கு வய்ப்பு கிடைக்குமா?………….
இந்திய கிரிக்கெட் அணி டிசம்பர் 4-ந் தேதி முதல் ஜனவரி 7-ந் தேதி வரை ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் டிசம்பர் 4-ந் தேதி தொடங்குகிறது. 
ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி தேர்வு மும்பையில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. தேர்வு குழு தலைவர் சந்தீப் பட்டீல் தலைமையில் தேர்வு குழுவினர் ஆலோசனை நடத்தி அணியை தேர்வு செய்கிறது.
துலீப் கோப்பை போட்டியின் இறுதி ஆட்டத்தில் இரண்டு இன்னிங்சிலும் சதம் அடித்த பெங்களூர் வீரர் லோகேஷ் ராகுலுக்கு மாற்று தொடக்க ஆட்டக்காரராக அணியில் இடம் கிடைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மற்றபடி அணியில் பெரிய அளவில் மாற்றம் இருக்காது என்று தெரிகிறது