Designed by Iniyas LTD
ஆந்திர காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டுக்கு தமிழக அரசியல் தலைவர்கள் கண்டனம்
சேஷாலம் வனப்பகுதியில் ஆந்திர காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டுக்கு தமிழக அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், வனத்துறையின் துப்பாக்கிச்சூடு சம்பவம் பல்வேறு சந்தேகங்களை எழுப்புவதாக தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இரு மாநிலம் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கொண்ட குழுவை அமைத்து பாரபட்சமற்ற விசாரணைக்கு ஆந்திர அரசு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். மதிமுக பொது செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் சம்பந்தப்பட்டவர்கள் மீது கொலை வழக்கு தொடர்ந்து அவர்களை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
மேலும் பணியில் இருக்கும் உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆந்திர அரசு தக்க நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
இந்திய ஜனநாயக கட்சி நிறுவனத் தலைவர் பாரிவேந்தர் வெளியிட்டுள்ள அறிக்கையில் , துப்பாக்கிச்சூட்டில் தொடர்புடையவர்களை பணி நீக்கம் செய்து, நீதி விசாரணைக்கு ஆந்திர அரசு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.