தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

ஆந்திராவில் தமிழர்கள் என்கவுன்டர் விவகாரம் : திடுக்கிடும் உண்மைகள்!

sandalwood-smugglers-killed20 தமிழர்கள் ஆந்திராவில் சுட்டுக்கொல்லப்பட்டது தொடர்பாக புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த ஏப்ரல் 7 ஆம் தேதி போலீசாரின் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் தொலைபேசி அழைப்புகள் தொடர்பான தகவல்களும், ஆந்திரா போலீசார் முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிட்டிருக்கும் தகவல்களும் முரண்படுவது தெரியவந்துள்ளது. செம்மரக்கட்டை கடத்தல்காரர்கள் ஏப்ரல் 5ம் தேதி சந்திரகிரி மண்டல் பகுதியில் செம்மரங்களை வெட்டி எடுப்பது ரகசிய கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்ததாக ஆந்திரா காவல்துறையினர் தெரிவித்திருந்தனர்.

ஆனால்,துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டவர்களின் தொலைபேசி அழைப்புகளை ஆய்வு செய்தபோது, அவர்கள் ஏப்ரல் 7ம் தேதி அதிகாலை 2 மணி 33 நிமிடங்களுக்குத்தான் சந்திரகிரி மண்டல் பகுதிக்கு வந்தது தெரியவந்திருக்கிறது. தொலைபேசி அழைப்புகளின் படி பார்க்கும் போது 6ம் தேதி மாலை 5 மணிக்கு தமிழக – ஆந்திரா எல்லையில் அவர்கள் இருந்தது தெரியவந்துள்ளது. இதுவும் ஆந்திரா போலீசாரின் முதல் தகவல் அறிக்கைக்கு முரணாக அமைந்திருக்கிறது.

 ஏப்ரல் 6ம் தேதி பிற்பகலில்தான் சுட்டுக்கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் சொந்த ஊர்களில் இருந்து புறப்பட்டிருப்பதும் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சந்திரகிரி மண்டல் பகுதியில் செம்மரங்கள் இல்லாத நிலையில், செம்மரக்கட்டைகளை வெட்டி கடத்திவரும் போதுதான் துப்பாக்கிச் சூடு நடந்ததாக போலீசார் கூறியிருப்பது சந்தேகத்தை வலுப்படுத்தி இருக்கிறது.

Comments
Loading...