தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

ஆபிரிக்காவில் 18 பேர் உயிரிழப்பு…

ஆப்பிரிக்க நாடான ஐவரி கோஸ்ட்டில் கனமழையால் வெள்ளத்தில் சிக்கி 18 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அபித்ஜன் ((Abidjan)) நகரில்  வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியதோடு ,.10 அடி உயரத்திற்கு வெள்ளம் பாய்ந்து சென்றதால் வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந் நிலையில், வெள்ளத்தில் சிக்கிய 115 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.
குறித்த பிரதேசத்தில் வீடுகள் தண்ணீரில் மூழ்கிக் கிடப்பதால், பொதுமக்கள் அங்கு செல்வதைத் தவிர்க்கவேண்டும் என ஐவரி கோஸ்ட் அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
Comments
Loading...