Designed by Iniyas LTD
ஆப்கானில் தலிபான்கள் தாக்குதல் – 23 பேர் பலி
ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான்கள் நடத்திய தாக்குதல்களில் 23 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஆப்கானிஸ்தான் நாட்டின் பரா மாகாணத்தின் மேற்கு பகுதியில் உள்ள ராணுவ முகாம் மீது நேற்றிரவு தாலிபன் பயங்ரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் 18 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். மேலும் இரண்டு ராணுவ வீரர்கள் காயமடைந்தனர்.
அதைத்தொடர்ந்து இன்று காலை சுமார் 8:30 மணியளவில் காபுல் நகரில் மக்கள் கூட்டம் அதிகம் உள்ள பகுதியில் தற்கொலைப்படை பயங்கரவாதி ஒருவன் நடத்திய தாக்குதலில் மூன்று பேர் உயிரிழந்ததோடு, ஐந்து பேர் காயமடைந்தனர். இந்த தாக்குலுக்கு எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
ஹெல்மாண்ட் மாகாணத்தின் தெற்கு பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய இரண்டு கார் வெடிகுண்டு தாக்குதலில் இரண்டு ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். தாலிபன் பயங்கரவாதிகள் நடத்திய இந்த தாக்குதலில் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இன்று நடைபெற்ற தாக்குதல்களில் 23 பேர் உயிரிழந்துள்ளனர்.