Designed by Iniyas LTD
ஆப்கானிஸ்தானில் டேங்கர் லாரியுடன் பயணிகள் பேருந்து நேருக்கு நேர் மோதல்
ஆப்கானிஸ்தானில் இன்று டேங்கர் லாரியுடன் பயணிகள் பேருந்து நேருக்கு நேர் மோதிய விபத்தில் 35 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஆப்கானிஸ்தானில் உள்ள கந்தஹார் நகரில் இருந்து காபுல் நோக்கி இன்றுகாலை ஒரு பயணிகள் பேருந்து சென்று கொண்டிருந்தது.
சாபுல் மாகாணம் வழியாக சென்றபோது எதிர்திசையில் வேகமாக வந்த பெட்ரோல் டாங்கர் லாரி பேருந்தின் மீது மோதியது. இந்த கோர விபத்தில் படுகாயமடைந்த 35 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக சாபுக் மாகாண கவர்னர் பிஸ்மில்லா ஆப்கன்மால் தெரிவித்துள்ளார். படுகாயமடைந்த 20-க்கும் அதிகமானவர்கள் அருகாமையில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.