Designed by Iniyas LTD
இந்த மாதமே மேகி நூடுல்ஸ் விற்பனை தொடங்கும்: நெஸ்லே இந்தியா
மேகி நூடுல்ஸ்கள் சில்லறை விற்பனை இம்மாதத்தில் தொடங்கும் என அதை தயாரிக்கும் நெஸ்லே இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.
புதிதாக தயாரிக்கப்பட்ட மேகி நூடுல்ஸ்களில் ரசாயனங்களின் அளவு அனுமதிக்கப்பட்ட அளவுக்குள் இருப்பது சோதனைகளில் தெரியவந்துள்ளதாக நெஸ்லே இந்தியா தெரிவித்துள்ளது. எனவே இதன் விற்பனையை தொடங்க முடிவு செய்துள்ளதாக அந்நிறுவனம் கூறியுள்ளது.
மேகி நூடுல்ஸ்களில் காரீயம் மற்றும் மோனோ சோடியம் குளூட்டாமேட் ஆகிய வேதிப்பொருட்கள் வெளியான புகார்களின் பேரில் அதன் விற்பனைக்கு இந்திய உணவுத் தரம் மற்றும் பாதுகாப்பு ஆணையம் கடந்த ஜூன் 5-ம் தேதி தடை விதித்திருந்தது.
இதை எதிர்த்து மும்பை உயர்நீதிமன்றத்தில் நெஸ்லே இந்தியா வழக்கு தொடர்ந்திருந்தது. இதை விசாரித்த நீதிமன்றம், மேகி நூடுல்ஸ்களுக்கு தடையை நீக்கியதுடன் அவற்றை அரசு ஆய்வகங்களில் சோதிக்கவேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தது. இந்தச் சோதனையில் மேகி நூடுல்ஸ்கள் தேர்ச்சி பெற்றுள்ளதாக நெஸ்லே தெரிவித்துள்ளது.