தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

இந்திய அரசால் மகிந்தவுக்கு கடுமையான எச்சரிக்கை!

untitled9இந்திய அரசாங்கத்தினால் மகிந்த ராஜபக்ஷ கடுமையாக எச்சரிக்கப்பட்டுள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. ”எற்கா” எனப்படும் இந்தியாவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையிலான பொருளாதார தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஒப்பந்தத்துக்கு எதிரான மகிந்தவும் அவரது ஆதரவாளர்களும் பிரசாரம் செய்து வருகின்றனர்.

இதனால் இந்த உடன்படிக்கையை ஏற்படுத்திக் கொள்வதில் தடைகள் ஏற்பட்டுள்ளன. இந்த நிலையிலேயே சிறிலங்காவுக்கான இந்திய உயர்ஸ்தானிகரின் ஊடாக, மகிந்த ராஜபக்ஷ கடுமையாக எச்சரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments
Loading...