தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

இந்திய மீனவர்களை மீன்பிடிக்க தங்கள் கடற்பகுதியில் அனுமதிக்க முடியாது: இலங்கை அரசு திட்டவட்டம்

fishermen-protestஇந்திய அரசின் சார்பில் இலங்கை அரசுக்கு அளிக்கப்பட்ட பரிந்துரையில், மீன்வளம் மிக்க இலங்கை க‌டற்பரப்பில் வருடத்திற்கு 65 நாட்களுக்கு மட்டும் இந்திய மீனவர்கள் மீன்பிடிக்க அனுமதிக்க வேண்டும் என கோரப்பட்டிருந்தது. ஆனால் இலங்கை அரசு இதனை மறுத்துள்ளது. மேலும் 65 மணி நேரம் கூட அனுமதிக்க மாட்டோம் என்று திட்டவட்டமாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது.

மேலும் இதுதொடர்பாக கண்டியில் செய்தியாளர்களிடம் பேசிய இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் மகிந்த அமரவீரா,

65 நாட்கள் மீன்பிடிக்க பரிந்துரைக்கும் இந்தியாவின் கோரிக்கையை நிராகரிப்பதாகவும், இலங்கை கடற்பிரதேசத்தில் இந்திய மீனவர்களை 65 மணி நேரம் கூட அனுமதிக்க மாட்டோம் எனவும் உறுதிப்பட தெரிவித்தார்.

இந்நிலையில் ஏற்கனவே மீனவர் பிரச்சனைக்கு தீர்வு காணும் விதமாக இருநாட்டு மீனவர் பிரதிநிதிகள் பங்கேற்ற கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இவற்றில் 65 நாட்களுக்கு இந்திய மீனவர்களை இலங்கை பகுதியில் மீன்பிடிக்க அனுமதிப்பது உள்ளிட்ட பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டன. இதன்மூலம் இருநாட்டு கடற்பகுதியில் நிலவும் பதற்றத்தை தணிக்க முடியும் என மீனவர் பிரதிநிதிகள் எடுத்துரைத்தனர். இருநாட்டு மீனவர்களும் அமைதியாக தங்கள் தொழிலை மேற்கொள்ள வழிவகைச் செய்யும் என்றும் விளக்கியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Comments
Loading...