Designed by Iniyas LTD
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: 2-வது சுற்றி நடால்,ஃபெரர், ஜோகோவிச்
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் விளையாட்டில் முன்னணி வீரர்களான நடால், ஃபெரர், ஜோகோவிச் ஆகியோர் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.
கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் பாரீஸ் நகரில் நடைபெற்று வருகிறது. இன்று ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று நடைபெற்றது. இதில் 7-ம் நிலை வீரரான ஃபெரர், லக்கோ என்ற வீரரரை எதிர்கொண்டார். இதில் பெரரர் 6-1, 6-3, 6-1 என்ற நேர் செட் கணக்கில் வென்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.
இப்போட்டியில் 6-ம் நிலை வீரரான நடால், ஹேல்ஸை 6-3, 6-3, 6-4 என்ற கணக்கிலும், முதல் நிலை வீரரான ஜோகோவிச் 6-2, 7-5, 6,2 என்ற கணக்கில் நியேமினேனை வீழ்த்தியும் 2-வது சுற்றுக்கு முன்னேறினார்கள்.
மேலும், ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இஸ்னெர், பெர்லாக், அல்மாக்ரோ, ஆண்டர்சன், அர்னாபோல்டி, சார்டி சிலிக், ஜனோவிஸ், லு ஆகியோர் 2-வது சுற்றுக்கு முன்னேறினார்கள்.