Designed by Iniyas LTD
இந்திய மீனவர்கள் எல்லை தாண்டினால் கைது செய்யப்படுவார்கள்: இலங்கை அமைச்சர்
எல்லை தாண்டி மீன் பிடிக்கும் இந்திய மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவார்கள் என இலங்கை கடற்தொழில் அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
இந்திய, இலங்கை மீனவர் பிரச்னை குறித்து அடுத்த வாரத்தில் பேச்சுவார்த்தை நடத்தப்படும் எனவும் அமைச்சர் மகிந்த அமரவீர கூறியுள்ளார். இரு தரப்பு மீனவர்களின் பிரச்சனை குறித்து பேச்சுவார்தை நடத்த சந்தர்ப்பம் வழங்குமாறு இந்திய தூதர் தம்மிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் மீனவர்கள் கைது செய்யப்படுவதை கண்டித்து ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுவதை சுட்டிக்காட்டியுள்ள இலங்கை அமைச்சர் எதிர்ப்பு எந்த வடிவில் வந்தாலும், கைது நடவடிக்கைகள் தொடரும் என குறிப்பிட்டுள்ளார்.
மீனவர் பிரச்சனைக்கு தீர்வு காண இந்திய அரசின் ஒத்துழைப்புடன் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் இலங்கை அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.