Designed by Iniyas LTD
இனப்படுகொலை குறித்த சர்வதசே விசாரணையை இந்தியாவே தடுத்து வருகின்றதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலை குறித்த சர்வதசே விசாரணையை இந்தியாவே தடுத்து வருகின்றதாக இணைந்த வடக்கு கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் வரதராஜப்பெருமாள் தெரிவித்துள்ளார்.
வட தமிழீழம் ,யாழ்ப்பணத்தில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை வெளிப்படுத்தியுள்ளார்.
இதன்போது இலங்கை தொடர்பான விடயம் ஜெனிவாவில் பேசப்படும்போது, இந்தியா 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துங்கள் என்றே கூறி வருகின்றது. இதனையே ஆரம்பகாலத்தில் இருந்து இந்தியா கூறி வருகின்றது.
அதைவிடுத்து இதற்கு அப்பால் ஏனைய விடயங்களில் இந்திய அரசு கவனஞ்செலுத்துவதில்லை என்பதோடு அதற்காக அவர்கள் தயாராகவும் இல்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
தமிழ் மக்கள் சர்வதேச விசாரணையை வலியுறுத்தி வரும் நிலையில் அவ்வாறான ஒரு விசாரணையை இந்தியா விரும்பாமல் அதனை தடுக்கும் முயற்சிகளையே அவர்கள் செய்து வருகின்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்திய அரசு தனது தேசிய பாதுகாப்பினையும் நலனையும் கருத்திற்கொண்டே செயற்படுகின்றது. தமிழ் மக்களின் நலனை இந்தியா கவனிக்கவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனால் சர்வதேச விசாரணைக்கு இந்தியா எந்த விதத்திலும் உதவாது என்றும், மாறாக அதனைத் தடுப்பதில் மும்முரமாக பணியாற்றும் என்பதே உண்மை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.