Designed by Iniyas LTD
இன்று முதல் இலங்கையில் மீண்டும் கடும் மழை!
இன்று முதல், நாட்டின் பல பகுதிகளில் மழை அதிகரிக்கும் சாத்தியம் உள்ளதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
எதிர்வரும் 27ஆம் திகதி வரையில் இந்த மழை நீடிக்கும் என்றும் தெரிவித்த திணைக்களம், மேல், சப்ரகமுவா, மத்திய, வடமேல் மாகாணங்களுக்கும், காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்தது.
அத்துடன், கேகாலை, இரத்தினபுரி, களுத்துறை, கம்பஹா, கொழும்பு மற்றும் காலி போன்ற மாவட்டங்களில், 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை கிடைக்கும் என்றும், திணைக்களம் கூறியது.
இந்நிலையில், மழையினால் ஏற்படக்கூடிய விபத்துக்களைத் தடுத்துக்கொள்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக, இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்தது.