தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

இன்றைய தினம் யாழில் கைது செய்ய்யப்பட்ட 8 ரவுடிகளும் ஆவா குழுவின் விக்டா் அணியை சோ்ந்தவா்கள்…

யாழ்.மனிப்பாய், உடுவில் பகுதிகளில் இன்றைய தினம் பொலிஸாா் கைது செய்த 8 ரவுடிகளும் ஆவா குழுவின் விக்டா் அணியை சோ்ந்தவா்கள் என பொலிஸாா் கூறியுள்ளனர்.

அதோடு அவா்கள் வாளகளுடன் நிற்கும் பொலிஸார் புகைப்படங்களையும் மீட்டுள்ளனா்.

இன்று மானிப்பாய், உடுவில் பகுதிகளில் ஆவா குழு ரவுடிகளை இலக்கு வைத்து பெரும் தேடுதல் வேட்டை ஒன்றை பொலிஸாா் மேற்கொண்டிருந்தனா்.

இதன்போது கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 3 வாள்கள், ஒரு சுழியோடிக் கண்ணாடி மற்றும் 2 மோட்டார் சைக்கிள்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டன.

அவர்கள் வாள்வெட்டுக்குச் செல்லும் போது சுழியோடி கண்ணாடியை அணிந்தவாறு செல்வது அவர்களின் கைபேசியில் மீட்கப்பட்ட ஒளிப்படங்களின் மூலம் தெரியவந்துள்ளது.

மேலும் வாள்களில் தமது பெயர்களைப் பொறித்து வைத்திருப்பதும் அந்த ஒளிப்படங்களில் காண முடிகிறதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

அண்மைய நாள்களில் அடுத்தடுத்து மானிப்பாயில் வீடுகளுக்குள் புகுந்து வாள்வெட்டுக் கும்பல் ஒன்று அடாவடியில் ஈடுபட்டு வந்தது.

அந்த வகையில் கடந்த புதன்கிழமையும் மானிப்பாய் இந்துக் கல்லூரி ஒழுங்கை மற்றும் நகர்ப்பகுதியிலுள்ள வீடு என மூன்று வீடுகளுக்குள் 3 மோட்டார் சைக்கிள்களில் வந்த 9 பேர் கொண்ட கும்பல் தாக்குதல் நடத்தியது.

இதனைஅடுத்து இன்று மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...