தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

இன்றைய நாளில்…

மே 30

தொடர்புடைய பதிவு
  • 70 – எருசலேம் முற்றுகை (கிபி 70): டைட்டசும் அவனது உரோமைப் படைகளும் எருசலேமின் இரண்டாவது சுவரைத் தகர்த்தனர். யூதர்கள் முதலாம் சுவருக்குப் பின்வாங்கினர். உரோமர்கள் 15 கிலோமீட்டர்கள் சுற்றியுள்ள மரங்களைத் தறித்து முற்றுகையிட்டனர்.
  • 1381 – இங்கிலாந்தில் விவசாயிகளின் கலகம் ஆரம்பமானது.
  • 1431 – நூறாண்டுப் போர்: பிரெஞ்சு வீராங்கனை 19 வயது ஜோன் ஒஃப் ஆர்க் ரோவென் என்ற இடத்தில் ஆங்கிலேயர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட நீதிமன்றத்தினால் உயிருடன் தீ வைக்கப்பட்டு மரணதண்டனைக்கு உட்படுத்தப்பட்டாள்.
  • 1539 – தங்கம் கண்டுபிடிக்கும் நோக்கில் எர்னாண்டோ டி சோட்டோ தனது 600 படையினருடன் புளோரிடாவை அடைந்தான்.
  • 1574 – மூன்றாம் ஹென்றி பிரான்சின் மன்னராக முடிசூடினார்.
  • 1588 – எசுப்பானிய பெரும் கடற்படையெடுப்பு: 30,000 பேர்களுடன் 130 போர்க்கப்பல்களின் கடைசிக் கப்பல் ஆங்கிலக் கால்வாயை நோக்கிய பயணத்தை லிஸ்பனில் இருந்து ஆரம்பித்தது.
  • 1635 – முப்பதாண்டுப் போர்: பிராக் அமைதி உடன்பாடு எட்டப்பட்டது.
  • 1642 – இங்கிலாந்தின் முதலாம் சார்லஸ் மன்னர் வழங்கியிருந்த அனைத்து விருதுகளும் இந்நாளில் இருந்து செல்லுபடியாகாது என இங்கிலாந்து நாடாளுமன்றம் அறிவித்தது.
  • 1814 – நெப்போலியப் போர்கள்: பாரிசு உடன்பாடு எட்டப்பட்டது. பிரெஞ்சு எல்லைகள் 1792 இல் இருந்தவாறு மாற்றியமைக்கப்பட்டது. முதலாம் நெப்போலியன் எல்பா நாடு கடத்தப்பட்டான்.
  • 1815 – இலங்கையிலிருந்து காயப்பட்ட போர்வீரர்களை ஏற்றி வந்த பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியின் ஆர்னிஸ்டன் என்ற கப்பல் தென்னாபிரிக்காவுக்கு அருகில் அகுல்யாசு முனையில் மூழ்கியதில் அதில் பயணம் செய்த 378 பேரில் 372 பேர் உயிரிழந்தனர்.
  • 1842 – ஐக்கிய ராஜ்ஜியத்தின் விக்டோரியா மகாராணி இளவரசர் ஆல்பர்ட்டுடன் இலண்டனில் பயணம் செய்கையில் ஜோன் பிரான்சிசு என்பவன் அவரைக் கொலை செய்ய முயற்சித்தான்.
  • 1845 – திரினிடாட் டொபாகோவுக்கு முதல் தொகுதி இந்தியர்கள் பாட்டெல் ரசாக் கப்பலில் வந்திறங்கினர்.
  • 1854 – கேன்சஸ், நெப்ராஸ்கா ஆகியன ஐக்கிய அமெரிக்காவின் பிராந்தியங்கள் ஆகின.
  • 1876 – உதுமானியப் பேரரசர் சுல்தான் அப்துலசீசு பதவியில் இருந்து அகற்றப்பட்டு, அவரது மருமகன் ஐந்தாம் முராத் சுல்தானானார்.
  • 1883 – நியூயோர்க் நகரில் புரூக்ளின் பாலம் இடிந்து விழப்போவதாக எழுந்த வதந்தியை அடுத்து இடம்பெற்ற நெரிசலில் சிக்கி 12 பேர் இறந்தனர்.
  • 1913 – லண்டன் உடன்பாடு எட்டப்பட்டு முதலாம் பால்கன் போர் முடிவுக்கு வந்தது. அல்பேனியா தனி நாடாகியது.
  • 1917 – முதலாம் அலெக்சாண்டர் கிரேக்கத்தின் மன்னரானார்.
  • 1942 – இரண்டாம் உலகப் போர்: 1000 பிரித்தானியப் போர் விமானங்கள் ஜெர்மனியின் கோல்ன் நகரில் 90-நிமிடங்கள் குண்டுமாரி பொழிந்தன.
  • 1961 – நீண்ட காலம் டொமினிக்கன் குடியரசை ஆண்ட ரஃபாயெல் துருயீலோ சாந்தோ தொமிங்கோ நகரில் படுகொலை செய்யப்பட்டார்.
  • 1966 – முன்னாள் கொங்கோ பிரதமர் எவரீஸ்டே கிம்பா மற்றும் பல அரசியல் தலைவர்கள் கின்சாசா நகரில் அரசுத்தலைவர் யோசப் மொபுட்டுவின்ஆணையின் படி பகிரங்கமாகத் தூக்கிலிடப்பட்டார்கள்.
  • 1967 – நைஜீரியாவின் கிழக்குப் பகுதி பயாஃப்ரா குடியரசு என்ற பெயரில் விடுதலையை அறிவித்ததை அடுத்து அங்கு உள்நாட்டுப் போர் வெடித்தது.
  • 1971 – மரைனர் திட்டம்: செவ்வாய்க் கோளின் 70 விழுக்காட்டைப் படம் பிடிப்பதற்காகவும் அதன் வளிமண்டலத்தை ஆராயவும் என மரைனர் 9 விண்ணுக்கு ஏவப்பட்டது.
  • 1972 – இஸ்ரேலின் லொட் விமானநிலையத்தில் ஜப்பானிய செம்படை தாக்குதல் மேற்கொண்டதில் 24 பேர் கொல்லப்பட்டனர், 78 பேர் காயமடைந்தனர்.
  • 1975 – ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது.
  • 1981 – வங்காள தேசத்தில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியின் போது அரசுத்தலைவர் சியாவுர் ரகுமான் இராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
  • 1982 – பனிப்போர்: எசுப்பானியா நேட்டோ அமைப்பில் இணைந்தது.
  • 1987 – கோவா இந்தியாவின் தனி மாநிலமாகியது.
  • 1998 – வடக்கு ஆப்கானிஸ்தானில் தக்கார் மாகாணத்தில் 6.5 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில் 5,000 பேர் வரை இறந்தனர்.
  • 1998 – பாக்கிஸ்தான் கரான் பாலைவனத்தில் அணுகுண்டு சோதனையை மேற்கொண்டது.
  • 2012 – லைபீரியாவின் முன்னாள் அரசுத்தலைவர் சார்லசு டெய்லருக்கு சியேரா லியோனியின் உள்நாட்டுப் போரில் நிகழ்த்திய குற்றங்களுக்காக 50 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது
Comments
Loading...