Designed by Iniyas LTD
இலங்கையின் நல்லிணக்க நடவடிக்கைகள் குறித்து, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் ஜெனிவாவுக்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரநிதியுடன் கலந்துரையாடியுள்ளார்.
இலங்கையின் நல்லிணக்க நடவடிக்கைகள் குறித்து, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் செய்ட் ராட் அல் ஹுஸைன், ஜெனிவாவுக்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரநிதியுடன் கலந்துரையாடியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜெனிவாவுக்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி ஏ.எல்.ஏ. அஹீஸை, மனித உரிமைகள் ஆணையாளர் நேற்று சந்தித்த போதே குறித்த விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
உத்தியோகபூர்வ டுவிட்டர்
இத்தகவலை ஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் நிரந்தர பணிமனையின் உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் தெரிவித்துள்ளது.
இந்த கலந்துரையாடலின்போது இலங்கையில் சமாதானத்தைக் கட்டியெழுப்புதல், நல்லிணக்கம், பாதுகாப்பு, மனித உரிமைகளை ஊக்குவித்தல், சட்டத்தின் ஆட்சி என்பன குறித்து இருவரும் கலந்துரையாடியுள்ளனர்.
மேலும் இதன்போது பிராந்திய அபிவிருத்தி குறித்தும் கலந்துரையாடப்பட்டதாக ஜெனிவா பணிமனை தெரிவித்துள்ளது
