தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

இலங்கையில் ஐரோப்பிய பிரஜைகள் இருவர் நீரில் மூழ்கி பலி!

ஹபராதுவை கடலில் நீராடிக் கொண்டிருந்த இரண்டு ​வெளிநாட்டு பிரஜைகள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

ஹபராதுவை பிரதேசத்திலுள்ள சுற்றுலா விடுதி ஒன்றில் தங்கியிருந்த 67 வயதுடைய நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்தப் பெண், கடலில் நீராடிக்கொண்டிருந்தப் போது நீரில் மூழ்கியுள்ளார்.

இதன்போது அவரை மீட்டு, கராப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்தப் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அதேபோன்று, ஹபராதுவை, ஹெடீவத்தை பகுதியிலுள்ள கடலில், 38 வயதுடைய போலாந்து நாட்டு பிரஜை ஒருவர் நீராடிக் கொண்டிருந்தப்போது நீரில் மூழ்கியுள்ளார்.

அவரையும் சிகிச்சைக்காக கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதித்தப் போது, சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Comments
Loading...