Designed by Iniyas LTD
இலங்கையுடனான பேச்சுவார்த்தைக்கு முன் ஆலோசனை கூட்டம்: தேசிய மீனவர் பேரவை
இந்தியா,இலங்கை நாடுகள் இடையே நிலவும் மீனவர் பிரச்சனைக்கு தீர்வுக்காண 4ஆம் கட்ட பேச்சுவார்த்தை நடத்துவதற்கு முன், மத்திய அரசு ஆலோசனைக் கூட்டம் நடத்த வேண்டும் என்று வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜுக்கு தேசிய மீனவர் பேரவை தலைவர் இளங்கோ கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த ஆலோசனைக் குழுவில் மீனவ பிரதிநிதிகள், வெளியுறவு அமைச்சக உறுப்பினர்கள், மீன்வள அமைச்சக உறுப்பினர்கள் உள்ளிட்டோர் இடம்பெற வேண்டும் என சுஷ்மா சுவராஜுக்கு எழுதியுள்ள கடிதத்தில் அவர் வலியுறுத்தியுள்ளார்
பேச்சுவார்த்தைக்குப் போவதற்கு முன் இந்த விவகாரத்தில் இந்திய அரசின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து முடிவெடுக்க இந்த ஆலோசனைக் கூட்டம் ஏதுவாக இருக்கும் என்று அவர் கூறியுள்ளார்.
இலங்கையில் இது போல ஒரு கமிட்டி அமைக்கப்பட்டுள்ளதாகவும் அதில் வட மற்றும் வடகிழக்கு மாகாண மீனவ பிரதிநிதிகள், வெளியுறவு அமைச்சக உறுப்பினர்கள் உள்ளிட்டோர் இடம்பெற்றிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.