தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

ஈராக் இராணுவ தாக்குதலில் 300 ஐஎஸ் தீவிரவாதிகள் கொல்லப்பட்டுளனர்

ஐ.எஸ். தீவிரவாதிகள் ஈராக் மற்றும் சிரியாவின் சில பகுதிகளை கைப்பற்றி அங்கு தங்களது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறார்கள். மேலும் இரு நாட்டு ராணுவத்திற்கு எதிராக நாசவேலைகளிலும் ஈடுபட்டு வருகிறார்கள்.isis-army

தீவிரவாதிகளை ஒடுக்கும் நடவடிக்கையில் அமெரிக்க கூட்டுப்படைகள் ஈடுபட்டு உள்ளன. இந்த நிலையில் ஈராக் ராணுவம் நடத்திய அதிரடி தாக்குதலில் 300 ஐ.எஸ். தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகவும், அவர்கள் வசம் இருந்த ஈராக்கின் துலியா நகரம் மீட்கப்பட்டு விட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

கடந்த ஜூன் மாதம் ஈராக் தலைநகர் பாக்தாத் மீது தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள், துலியா நகரை கைப்பற்றியது நினைவுகூரத்தக்கது.

Comments
Loading...