Designed by Iniyas LTD
உக்ரைனுடனான வர்த்தக உறவு குறித்து ரஷ்ய அதிபர் விளக்கம்!
உக்ரைன் உடனான தடையில்லா வர்த்தக ஒப்பந்தங்களை 2016ஆம் ஆண்டு முதல் நிறுத்தி வைக்க உள்ளதாக ரஷ்ய அதிபர் அறிவித்துள்ளார்.
இரு நாடுகள் இடையேயான வர்த்தக மற்றும் பொருளாதார உறவுகள் மோசமடைவது வருத்தமளிப்பதாகத் தெரிவித்துள்ள புடின், ரஷ்யத் தொழில்துறைக்கு நன்மை பயக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய நிலையில் இருப்பதாக விளக்கமளித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தல் குறித்து செய்தியாளர் கேட்ட கேள்விக்குப் , யார் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டாலும், அந்நாட்டுடனான உறவை மேம்படுத்திக்கொள்ளவே ரஷ்யா விரும்புவதாக புடின் தெரிவித்தார்.