தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

ரஷ்ய பேரிடர் மேலாண்மை மையத்தை பார்வையிட்டார் பிரதமர் மோடி

modi_NCMCஅரசு முறைப் பயணமாக ரஷ்யா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டின் தேசிய பேரிடர் மேலாண்மை மையத்துக்கு சென்று அங்கு நடைபெறும் பணிகளை நேரில் பார்வையிட்டார்.

ரஷ்யாவின் மிகவும் புகழ்பெற்ற தேசிய பேரிடர் மேலாண்மை மையத்துக்கு இன்று மதியம் சென்றார் பிரதமர் மோடி.

இந்த தேசிய பேரிடர் மேலாண்மை மையமானது அவசர கால சூழ்நிலைகளை, இயற்கைப் பேரிடர்களை சமாளிப்பதற்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்டதாகும். நாட்டில் ஏற்படும் அவசர காலத்தை கையாள்வதற்கான அமைச்சம் என்றே இதனை அழைப்பர்.

இந்த மையத்தில் சுமார் 25 ஆயிரம் பேர் பணியாற்றுகிறார்கள். பல்வேறு அசாத்தியமான சூழ்நிலைகளை கையாள வசதியாக 62 ஆயிரம் உபகரணங்களும் இங்கு வைக்கப்பட்டுள்ளது.

பல்வேறு முக்கியத் துறைகளை ஒருங்கிணைத்து இந்த அமைச்சகம் செயல்படுவதால், அவசர கால அமைச்சகத்தின் பணி அந்நாட்டில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

Comments
Loading...