தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

உலக கோப்பை போட்டியில் முதல் முறையாக ‘நாக்அவுட்’டில் வெற்றி பெற்ற தென்னாபிரிக்கா

தென்ஆப்பிரிக்க அணி முதல் முறையாக உலக கோப்பை போட்டியில் ‘நாக்அவுட்’டில் வெற்றி பெற்றது. அந்த அணி கால் இறுதி ஆட்டத்தில் இலங்கையை நசுக்கி தள்ளியது. முதலில் விளையாடிய இலங்கை அணி 37.2 ஓவரில் 133 ரன்னில் சுருண்டது. சங்ககரா அதிகபட்சமாக 45 ரன் எடுத்தார். இம்ரான் தாகீர் 4 விக்கெட் கைப்பற்றினார். டுமினி தொடர்ந்து 3 விக்கெட் கைப்பற்றி ஹாட்ரிக் சாதனை படைத்தார்.during the 2015 ICC Cricket World Cup match between South Africa and Ireland at Manuka Oval on March 3, 2015 in Canberra, Australia.

பின்னர் விளையாடிய தென்ஆப்பிரிக்கா 192 பந்துகள் எஞ்சி இருந்த நிலையில் 1 விக்கெட் இழப்புக்கு 134 ரன் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரை இறுதிக்கு தகுதி பெற்றது. குயின்டன் டி காக் 57 பந்தில் 78 ரன் எடுத்தார்.

இந்த வெற்றி குறித்து தென்ஆப்பிரிக்கா கேப்டன் டிவில்லியர்ஸ் நிருபர்களிடம் கூறியதாவது:–

எங்களது பந்துவீச்சு மிகவும் அபாரமாக இருந்தது. குறிப்பாக இம்ரான் தாகீரும், டுமினியும் நேர்த்தியுடன் பந்து வீசினார்கள். சுழற்பந்து வீரர்களான இருவர் மீதும் எனக்கு அதிகமான நம்பிக்கை இருக்கிறது.

இந்த வெற்றி சிறப்பானது. உலககோப்பையை வெல்வோம் என்பதில் எங்களது நம்பிக்கை அதிகரித்துள்ளது. மிகச்சிறந்த நிலையை நாங்கள் எட்டுவோம்.

இவ்வாறு டிவில்லியர்ஸ் கூறியுள்ளார்.

தென்ஆப்பிரிக்கா அணி அரை இறுதியில் நியூசிலாந்து அல்லது வெஸ்ட்இண்டீசை 24–ந்தேதி சந்திக்கிறது.

Comments
Loading...